நாடு முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் காவல்துறையினர் விசாரணைக்காக கைதிகளை அழைத்துவந்து அடித்துக் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
மேலும், இந்த வழக்கை வருகின்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றைய தினம் எந்தெந்த மாநில அரசுகள், எந்தெந்த அளவிற்கு பணிகளைச் செய்துள்ளனர் என்பதை நாங்கள் தெரிந்து கொள்கிறோம் என தெரிவித்தனர். மக்கள் மீது உண்மையாக அக்கறை இருந்தால், நீதிமன்றத்தை மதிப்பதாக இருந்தால் எந்தெந்த அரசுகள் எவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க போகிறது என்பதை பார்க்கவுள்ளோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜனவரி மாதம் 27ஆம் தேதி அன்று பணிகளை முடிக்காத அரசுகளுக்கு எந்த மாதிரியான கண்டனங்களை நீதிமன்றம் தெரிவிக்கப்போகிறது என்பதை இன்று தெரியவரும். சமீபத்தில் சத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை -மகன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 காவல்த்துறை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…