#Breaking:மகிழ்ச்சி...மீண்டும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு;டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

#Breaking: Happiness ... Low daily daily corona exposure; 2.59 lakh discharged in one day!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 525 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,261 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 3,37,704 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 3,33,53 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 4,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,92,37,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 525 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,89,409 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,59,168 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,65,60,650 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை21,13,365ஆக இருந்த நிலையில்21,87,205 ஆகஅதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,61,92,84,270 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 71,10,445பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.