#Breaking:அதிகரிக்கும் கொரோனா..”அனைத்து மாநில அரசுகளும் இதனை உடனே செய்ய வேண்டும்”- மத்திய அரசு கடிதம்!

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,ஆக்சிஜன் கையிருப்பை உடனே உறுதிப்படுத்துமாறு கோரி அனைத்து மாநில அரசுகளுக்கு,மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ,ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு,கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,குறைந்த பட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும்,திரவ நிலை மருத்துவ ஆக்சிஜனை எந்தவித தடையும் இல்லாமல் எடுத்து செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
COVID-19: Union Health Secretary Rajesh Bhushan writes to chief secretaries of all States/UTs for taking immediate measures to ensure optimal availability of medical oxygen at health facilities pic.twitter.com/do43sU8xve
— ANI (@ANI) January 12, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025