#BREAKING: தடங்கல் ஏதுமின்றி கொரோனா தடுப்பூசி – சீரம், பாரத் பயோடெக் கூட்டறிக்கை

Serum Bharat Biotech has announced that it has pledged to distribute the corona vaccine without interruption.

கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளதாக சீரம், பாரத் பயோடெக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளோம் என சீரம், பாரத் பயோடெக் நிறுவனம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. மக்களின் உயிர் காப்பது ஒன்றே தங்கள் முழுமுதல் நோக்கம் என்று சீரம், பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி ஏற்றுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தின் தரம் தொடர்பாக சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் இடையே முரண்பட்ட கருத்துக்கள் வெளியான நிலையில், தற்போது இரு நிறுவனமும் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா, சீரம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பு மருந்து மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் தற்போது இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு அவசர காலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.