21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்திய சென்னை தம்பதிகள் குஜராத்தில் கைது...!

A Chennai couple has been arrested in Gujarat for smuggling 3,000 kg of Afghan heroin worth Rs 21,000 crore.

21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்திய சென்னை தம்பதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா எனும் துறைமுகத்தில் 3000 கிலோ எடை உள்ள சுமார் 21,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தம்பதிகள் இருவரை வருவாய் புலனாய்வு துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆந்திர நிறுவனம் ஒன்றிலிருந்து குஜராத் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த கண்டெய்னர்களை வழக்கமாக சோதனை செய்த போது, அந்த கண்டெய்னர்களில் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஹெராயின் போதைபொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் பவுடர்கள் ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட ஒரு போதை செடியிலிருந்து தயாரிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 21,000 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.