வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் எலும்பு! ஒரே கடை மீது குவியும் புகார்!

Veg Biryani From Swiggy

ஹைதராபாத் : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மூலம், ஆர்டர் செய்த பிரியாணியால் குறைபாடு இருப்பதாக சமூக வளைதளமான X தள பக்கத்தில், இரண்டு தனித்தனி வாடிக்கையாளர் தங்களது புகாரை அளித்துள்ளனர்.

அதாவத, ஹைதராபாத்தில் உள்ள பிரபல உணவகமான மெஹ்ஃபிலில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட பன்னீர் பிரியாணியில் சிக்கன் எலும்பு இருப்பதை அவினாஷ் என்ற பயனர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, இதே மாதிரியான வேறொரு புகாரை சாய் தேஜா என்பவர் அளித்திருந்தார். அதே உணவாகமான மெஹ்ஃபில் கடையிலிருந்து ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினார். பின்னர், அந்த சிக்கன் பிரியாணியில் இருக்கும் ஒரு கறி துண்டில் புழு கிடப்பதை சாய் தேஜா புகைப்படங்கள் பகிருந்தார்.

இதனையடுத்து, ஸ்விகியில் ஆர்டர் செய்த அந்த சிக்கன் பிரியாணிக்காக தான் ரூ.318 அவர் கொடுத்ததாகவும், இதனை குறித்து ஸ்விகியிடம் தெரிவித்த போதிலும் அவருக்கு ரூ.64 மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அன்று நடந்துள்ளது.

அந்த புகாரை தொடர்ந்து அவினாஷ், சாய் தேஜாவின் புகாரில் தனது புகாரையும் இணைத்துக்கொண்டார். அவினாஷுக்கு பதிலளித்த பதிலளித்த ஸ்விகியின் பராமரிப்பு நிர்வாகி ஒருவர், “வணக்கம், உங்கள் சைவ ஆர்டரில் அசைவப் பொருளைப் பெற்றுள்ளதைக் கேட்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். தயவுசெய்து ஆர்டர் ஐடியைப் பகிரவும், அதனால் நாங்கள் விவரங்களைப் பெறலாம், உங்களுக்கு சிறப்பாக உதவ முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற பிரபலமான கடையில் இருந்து ஆர்டர் செய்த உணவில் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை கண்டு மக்கள் சற்று அதிரிச்சியில் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies