கேரள மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தென்மேற்கு மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு மழை காரணமாக கேரளாவில் உள்ள 9 -க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய 59 பேரை காணவில்லை.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.ராணுவம், விமானப்படை, கடற்படை என அனைத்து படைகளும் தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று கேரள முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அவரது பதிவில் கேரளாவில் இந்த ஆண்டு மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டத்தில் உலா புத்துமலை,மேப்பாடி பகுதிகள்,மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பூதானம்,கவளப்பாரை பகுதிகளும் தான்.இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊர் மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.
அரசு நிவாரண முகாம்களில் தங்கி வரும் அந்த பகுதி மக்களை சந்தித்தேன்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் கேரள அரசு முடிந்த அளவு உதவியை செய்து வருகிறது.செவ்வாய் கிழமை மாலை வரை 91 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.1243 அரசு முகாம்களில் 224506 மக்கள் தங்கியுள்ளனர்.
நூற்றாண்டு கண்ட பெரு வெள்ளத்துக்கு ஒருவருடம் பிறகு தான் இந்த பேரழிவு என்கிறதும் குறிப்பிடத்தக்கது.UN மதிப்பீடு பிரகாரம் இதிலிருந்து மீண்டு வருவதற்கு ரூ.31,000 கோடி தேவைப்படுகிறது.
இந்த நிலைமையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இது எங்களை மிகவும் வேதனைப்படுத்திக்கிறது.கேரள மக்களுக்கு உங்கள் உதவிகள் தேவை.சிறியதா,பெரியதா வேறுபாடு இல்லை.முடிந்த அளவுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டவர்கள் மீது 19 வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…