பீகார் மாநிலத்தில் உள்ள ரோஹ்தாஸ் எனும் மாவட்டத்தை சேர்ந்த பர்னா எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணின் லவ்லி சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையின் போது அதிக அளவு கோபம் அடைந்ததால் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தான் திருமணம் நடந்ததாகவும், இவர்களுக்கு தற்போது 10 மாத பெண் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கணவனைக் கொன்ற அந்த பெண்மணி கூட்டு குடும்பமாக இருப்பதால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது இந்த பெண்மணி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவரை கைது செய்வோம் எனவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…