ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் – பிரதமர்!

Prime Minister Modi has congratulated the people celebrating Onam on his Twitter page.

ஓணம் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளா மக்கள் அனைவரும் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கேரள மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஓணம் பண்டிகையை கொண்டாட கூடிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரத்துவத்தையும், நேர்மறை எண்ணங்களையும், நல்லிணக்கத்தையும் விதைக்கக் கூடிய இந்த ஓணம் பண்டிகை நாளில் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node