ஆம் ஆத்மியை மகிழ்விக்கவே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது.! அமித்ஷா விமர்சனம்.!

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றப்பட்டது. டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றிய மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தார்.
மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சுமார் 8 மணிநேரம் வரையில் நீண்ட நேர விவாதம் டெல்லி நிர்வாக மசோதா மீது மாநிலங்களவையில் நடைபெற்றது.
அப்போது காரசார விவாதங்கள் நடைபெற்றன. இந்த டெல்லி நிர்வாக மசோதாவுக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி நிர்வாக மசோதா மீது காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணம் ஆம் ஆத்மியை மகிழ்விக்க தான் என்று குற்றம் சாட்டினார்.
முதலில் டெல்லி நிர்வாக அவசர சட்ட மசோதா மீது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்த பிறகு, ஆம் ஆத்மி கட்சியினர் வைத்த கோரிக்கையின் பெயரில் தான் காங்கிரஸ் கட்சி டெல்லி நிர்வாக மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.