#BREAKING: பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி., ஒரு இடம்கூட பிடிக்காமல் பாஜக படுதோல்வி.!

Published by
பாலா கலியமூர்த்தி

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 7-ஐ கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது, சென்ற பிப்.14ம் தேதி, 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேத்தலில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது என கூறப்பட்டது.

இதில் மொத்தம் 9,222 பேர் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் 2,037  பேரும், பாஜக சார்பில் 1,003 பேரை தேர்தலில் போட்டியிட்டனர். இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முனிசிப்பாலிட்டிகள் அனைத்தையும் காங்கிரஸ் கைப்பற்றி, பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடந்த இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் அரியானா போன்ற மாநில விவசாயிகள் தான் அதிகளவில் வேளாண் சட்டத்துக்கு எதிராக பங்கெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, அபோஹர், பதிந்தா, கபுர்தலா, ஹோஷியார்பூர், பதான்கோட், மோகா மற்றும் பட்லாவை ஆகிய 7 மாநகராட்சிகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago