கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து..! உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு..!

CoromandelExpress

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சர் இழப்பீடு அறிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில்  பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 கருணை இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்