விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர்,ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கைத்தொடர்புகொண்டு விபத்து குறித்து கேட்டறிந்துள்ளார்.
மேலும்,விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உடனடியாக அவசர உதவி அழைப்பு எண்ணைஉருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, 044-28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node