மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக அத்திக்கரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையி பாதிக்கப்பட்டவர்களை கடற்படை தளத்தில் உள்ள மருத்துவமனையில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த வீரர்களுடன் தங்கியிருந்த சக வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கு கடற்படை தளத்தில் உள்ள குடியிருப்பு விடுதிகளில் மாலுமிகள் தங்கியிருந்தனர். ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே சென்று வந்து உள்ளனர். 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன் இந்திய ராணுவத்தினரில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிசிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…