மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 266 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆயிரத்தை கடந்தது.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 8,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,84,281 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 266 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,194 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,58,140 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,14,648 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025