அமைச்சரின் மகனை கைது செய்த பெண் காவலர்.! உயர் அதிகாரிகள் ஆதரவளிக்காததால் ராஜினாமா செய்தேன் – சுனிதா யாதவ்.!

அமைச்சரின் மகனையே கைது செய்த பெண் காவலரான சுனிதா யாதவ் ராஜினாமா செய்தததாக கூறியுள்ளார்.
குஜராத்தில் பாஜக அமைச்சராக உள்ள குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானி மற்றும் அவரது நண்பர்கள் சூரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட பெண் காவலர் சுனிதா யாதவ் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. அதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அமைச்சரின் மகனையே கைது செய்து துணிச்சலுடன் செயல்பட்ட சுனிதாவிற்கு பாராட்டுகள் குவிந்தன. அதனையடுத்து சுனிதா உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா யாதவ், எனது உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்காததால் நான் ராஜினாமா செய்து விட்டேன். நான் ஒரு கான்ஸ்டபிள் என்ற முறையில் எனது கடமையை செய்தேன்.
அமைச்சரின் மகனை போல முக்கியமான நபர்களாக நினைப்பது நமது அமைப்பின் தவறு என்று கூறியுள்ளார். இதற்கு சூரத் போலீஸ் கமிஷனர், அவர் ராஜினாமா வழங்கவில்லை என்றும் விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இந்த சூழலில் அவர் ராஜினாமா செய்ய முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025