கொரோனா மனித குலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது – பிரதமர் மோடி

Published by
லீனா

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூற வேண்டும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின், பிராமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,  டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசிய கோடியை ஏற்றினார். பிரதமர் மோடிக்கு தேசிய கோடியை ஏற்றி வைத்த பிறகு ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன.

அதன்பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை தொடங்கினார். மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூற வேண்டும். நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூறுவதற்கான தினம் இன்று. பிரிவினையால் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மரியாதை செலுத்துவோம்.

கொரோனா காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். கொரோனா மனித குலத்திற்கு மிகப் பெரும் சவாலாக மாறியது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது. போலியோ தடுப்பூசியை பெறுவதற்கு நமக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பூசி அப்படி அல்ல,. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கட்டமைப்பு குறைவாக இருந்தாலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். நம் நாட்டின்  உள்கட்டமைப்பு எந்த நாட்டை விடவும் குறைவானவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நமது லட்சியங்களை அடைய கடினமான உழைப்பை செலுத்த வேண்டும். ஒரு வினாடி கூட வீணடிக்காமல் உழைக்க தொடங்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் நாம் இலக்கை அடைய ஒரு வினாடி கூட வீணாக்க கூடாது. வளர்ச்சிப் பாதையில் நம் நாடு மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. மருத்துவ வசதி உள்ளிட்டவை மக்களை வேகமாக சென்றடையவேண்டும். உஜ்வாலா முதல் ஆயுஷ்மன் பாரத் திட்டம் வரை பல்வேறு திட்டங்கள் ஏழைகளுக்கு உதவியாக இருக்கின்றன.

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்களுக்கு கைகளை தட்டி பாராட்டுகளை தெரிவித்தார். ஒலிம்பிக்கில் வீரர்கள் திறமையுடன் விளையாடி பெருமை சேர்த்தனர். வருங்கால தலைமுறையினருக்கு உற்சாகம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Published by
லீனா

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

7 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

7 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

9 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

10 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

11 hours ago