#CoronaUpdate:இந்தியாவில் புதியதாக 14,989 பேருக்கு கொரோனா தொற்று 98 பேர் இறப்பு

Corona infection kills 98 out of 14,989 new deaths in India

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,989 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று மட்டும் 98 பேர் இறந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,39,516 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,57,346 ஆகவும் உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் 13,123 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,08,12,044 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவர்களின் எண்ணிக்கை 1,70,126 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.