இந்தியாவில் கொரோனாவின் நிலை – புதிய பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு?

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டாலும், கொரோனாவின் தீவிரம் இந்தியாவில் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 90,04,325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,32,202 பேர் உயிரிழந்துள்ளனர், 84,27,016 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் 46,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 584 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,45,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை மாற நாம் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவோம், சமூக இடைவெளிகளை கடைபிடித்து, முக கவசம் அணிந்து கொரோனா இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.