டெல்லி:கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி கட்டாயம் – இதற்கு எதிரானது:
தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.மேலும்,தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள சொல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம்:
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகிறார்.அதன்படி,தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தியே தடுப்பூசியை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாதம்:
ஒரு பேரிடர் இருக்கும்போது அதனைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை வேண்டுமானலும் எடுக்கலாம் என்பது மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரம்.எனவே,அதனை பயன்படுத்திதான் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளோம்.
ஆனால்,தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதால்தான் கொரோனா வைரஸ் ஆனது உருமாற்றம் அடைகின்றன.எனவே,இதனால் மீண்டும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறோம்.மேலும்,மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி 100% தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்படுகின்றது”,என்று வாதிட்டிருந்தார்.
தடுப்பூசி கட்டாயமல்ல:
இந்நிலையில்,100% தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது உண்மைதான்,ஆனால் கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…