வெறும் ரூ.3 தராததால் ரூ.25,000 இழப்பீடு வழங்க கடை உரிமையாளருக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் 5 ரூபாய் கொடுத்து மீதம் ரூ.3 சில்லறை தராததால் பிரஃபுல்ல குமார் தாஷ், என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியதால், கடை உரிமையாளருக்கு வாடிக்கையாளருக்கு ரூ.25,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28 அன்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரஃபுல்ல குமார் தாஷ், அம்மாநில நகரில் ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென 5 ரூபாய் கொடுத்துவிட்டு மீத சில்லறையை கேட்டதும், ‘பிச்சைக்காரன் கூட ரூ.3 வாங்கமாட்டான்’ என கடைக்காரர் அவமானப்படுத்தியதாக கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
ஐந்து ரூபாயைக் கொடுத்து, மூன்று ரூபாயைத் திருப்பித் தருமாறு கடைக்காரரிடம் கூறினார், அவர் எடுத்துக்கொண்ட ஜெராக்ஸின் விலை ரூ.2 ஆகும். ஆனால், கடைக்காரர் மீதி பணத்தைத் திருப்பித் தர மறுத்து, அவரை அவமானப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடைக்காரர் 5 ரூபாயை திருப்பிக் கொடுத்ததோடு, “அந்தப் பணத்தை பிச்சைக்காரருக்கு நன்கொடையாகக் கொடுத்தேன்”என்று கூறி அவரை அவமானப்படுத்தினார். இந்த சம்பவம் கடைக்கு சென்ற வாடிக்கையாளரான பிரஃபுல்ல குமார் தாஷ் மன அழுத்தத்தையும் சிரமத்தையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யமாறு காவல்துறையிடம் புகார் அளித்தநிலையில், இந்த புகாரின் அடிப்படையில் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், தனது வாடிக்கையாளருக்கு 3 ரூபாயை திருப்பித் தராமலும், அவரை அவமானப்படுத்தியதால் கடை உரிமையாளருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி, கடைக்காரர் 30 நாட்களுக்குள் அபராதம் செலுத்தத் தவறினால், அவர் ஆண்டுக்கு 9% வட்டி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.