கோவாக்சின் உற்பத்தி தொடக்கத்திலிருந்து பயனரை அடைய 4 மாதங்கள் ஆகும்: பாரத் பயோடெக்

Published by
Sharmi

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்து வருவதால் தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரமாக்கியுள்ளது. இந்தியர்களுக்கு இந்த வருடத்திலேயே தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், பாரத் பையோடெக் நிறுவனம் ஒரு தொகுப்பு தடுப்பூசி தாயாரிக்க 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா அலை வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசியை போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பல மாநிலங்கள் தன்னிச்சையாக தடுப்பூசி நிறுவனங்களிடம் தடுப்பூசி இறக்குமதி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

2021-க்குள் இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாரத் பயோடெக் தடுப்பூசி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு ஆர்டருக்கான விநியோகம் தொடங்க 4 மாதங்கள் ஆகும் என்றும், கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு கொடுத்த ஆர்டரை ஜூன் மாதம் தான்  விநியோகம் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.ஒரு தொகுப்பிற்கான தடுப்பூசியை தயாரித்து அதை விநியோகிக்க குறைந்தது 120 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது பாரத் பையோடெக் நிறுவனம்.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளை போடுவதற்கு அனுமதி இருந்தாலும் பெரும்பாலும் கோவாக்ஸின் தடுப்பூசியே போடப்பட்டு  வருகிறது. இந்நிலையில் பாரத் பையோடெக் நிறுவனம் அறிவித்த இத்தகவலால் மத்திய அரசு கூறிய படி இந்த வருடத்திற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுமா  ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

7 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

7 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

9 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

10 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

11 hours ago