கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் – பசவராஜ் பொம்மை!

Police Minister Basavaraj has said that curfew will be tightened in Karnataka as the spread of corona has increased.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது மிக அதிக அளவில் காணப்படுகிறது. இது குறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக கடந்த 11ம் தேதி முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆனால் காலை நேரங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் கடைகளுக்கு செல்வதாள் கொரோனா பரவும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும், தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடிய நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கிராமங்களிலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் அதன் தீவிரத் தன்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், இதனால் ஊரடங்கு மேலும் தீவிரமாக அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக யாதகிரியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 5 பேர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாகவும், இவ்வாறு விதிகளை நடக்காமல் மக்கள் நடந்து கொள்ளும் பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும்? எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்க வேண்டும் எனவும், அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 23-ஆம் தேதி அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.