BREAKING: லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

Two death in cylinder explosion at oxygen plant in Lucknow

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு.

லக்னோவின் சின்ஹாட்டில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஆக்ஸிஜன் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்தது. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர், 2 பேர் உயிரிழந்துவிட்டனர். அதே நேரத்தில் பல தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

காயமடைந்த அனைவரும் கோம்டிநகரில் உள்ள லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சிலிண்டர் வெடிப்பின் போது அங்கு சுற்றியுள்ள பகுதியும் அதிர்ந்தது. விபத்து நடந்த ஆலையில் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு படை மற்றும் போலீசார் உள்ளனர்.