உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு ...!

The ashes of the late Troop Commander Bipin Rawat and his wife have been found buried in the Ganges River.

உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நல்லடக்கம்  நேற்று மாலை 5 மணி அளவில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் அஸ்தி இன்று உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவரது மகள்கள் மூலமாக கங்கை நதியில் கரைக்கப்பட்டுள்ளது.