இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றுக் கொண்டதுடன் மக்களும் தங்களுக்கான இரண்டாவது ரோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மாநிலங்களில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மாநில அரசுகள் திணறி வருகிறது. இருந்தாலும் தங்கள் மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியிலும் கொரோனா வைரஸின் தீவிரம் மிக அதிக அளவில் காணப்படுகிறது.
ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் தனது முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இன்று தனக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள அனைவரையுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள தான் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
I took my second dose of vaccine today. I urge everyone, whoever is eligible to get vaccinated
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 29, 2021