நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு!!

நெல்லை மற்றும் குமாரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடலோர கிராமங்களான கூடங்குளம், கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல் மற்றும் தென் பகுதிகளான வள்ளியூர், பழவூர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்று கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.