ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை பொடி போன்ற பொருள் கண்டெடுப்பு ...!

A white powder-like substance has been found in the court premises following the explosion of a mysterious object in the Rohini court premises.

ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை பொடி போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கம் போல அனைவரும் பணிக்கு வந்து வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திடீரென நீதிமன்ற வளாகத்தினுள் மர்மப் பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அருகில் இருந்த சில பொருட்கள் மற்றும் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தற்பொழுது நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெள்ளை பொடி போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.