“தமிழர்களை சீண்டாமல் இருக்க வேண்டும்.,” மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி அறிவுறுத்தல்.!

மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

DMK MP Kanimozhi Tweet about Nirmala Sitharaman - Annapurna Srinivasan Issue

சென்னை : நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற சிறுகுறு தொழிலதிபர்கள், ஹோட்டல் அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரும் முக்கிய பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர்.

ஸ்வீட் – காரம் ஜி.எஸ்.டி :

அப்போது ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன் பேசுகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவுப்பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிகள் பற்றி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார். “ஸ்வீட்டுக்கு 5%, காரத்திற்கு கூடுதல் வரி, ப்ரெட், பன்-களுக்கு வரி இல்லை. ஜாம் போன்ற பொருட்களுக்கு 18 சதவீதம் வரையில் ஜி.எஸ்.டி வரி உள்ளது. அதனை முறைப்படுத்த வேண்டும்.” என கோரிக்கை வைத்தார்.

அனைவரும் சிரித்தனர்.,

இந்த நிகழ்வு, வீடியோ வாயிலாக சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், உணவுப்பொருட்களுக்கான வெவ்வேறு ஜி.எஸ்.டி வரி விதிப்பு இருப்பது பேசுபொருளாக மாறியது.இது குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அவர் ஜனரஞ்சகமாக பேசியதால் அனைவரும் சிரித்தனர். இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை.” என தெரிவித்து இருந்தார்.

 மன்னிப்பு :

இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியதை அடுத்து, அன்னபூர்ணா சீனிவாசன் இன்று கோவை நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து, மன்னிப்பு கோரினார்.

அந்த சந்திப்பில் சீனிவாசன் பேசுகையில் , ” ஹோட்டல் அசோசியேசன் சார்பில் என்னை பேசச் சொன்னார்கள், நான் மீட்டிங்கிற்கு கூட வரவில்லை என்றுதான் சொன்னேன், ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. நீங்க வயதில் பெரியவங்க, தயவுசெய்து மன்னித்து விடுங்கள். நான் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டேன். இரவு முழுவதும் எனக்கு தூக்கமில்லை.” எனக் கூறியிருந்தார்.

நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் ஜி.எஸ்.டி வரிகள் குறித்து கோரிக்கை வைத்தது. அந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியது, பின்னர். இன்று நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோ அதேபோல சமூக வலைதள பக்கத்தில் வெளியானது. இந்த தொடர் நிகழ்வுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கனிமொழி டிவீட் :

திமுக எம்.பி கனிமொழி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில்,

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து – குறள் 978, அதிகாரம் 98.

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி பதிவிட்ட திருக்குறளின் அர்த்தம் என்னவென்றால், பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள். பண்பு இல்லாத சிறியோர், தம்மைத்  தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.” என்று அர்த்தப்படும்.

திமுக எம்.பி கனிமொழி, யாருடைய பெயரையும், எந்த நிகழ்வையும் குறிப்பிடாமல் மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் கூறும் வகையில் விமர்சனம் செய்திருப்பது  நிர்மலா சீதாராமன் – அன்னப்பூர்ணா சீனிவாசன் விவகாரத்தை தான் மறைமுகமாக கூறியிருக்கிறார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies