வெப்ப அலை எங்கு எப்போது வீச போகிறது தெரியுமா.? வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

Published by
பால முருகன்

வரும் நாட்களில் 9 மாநிலங்கள் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வெயில் 

இன்று மற்றும் நாளை  குஜராத் மற்றும் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலை நிலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, 12 ஆம் தேதி கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிராவிழும், 12 , 13 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் மற்றும் மேற்கு ராஜஸ்தான் பகுதிகளிலும்,  12 முதல் 14 வரை மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும்  13 மற்றும் 14 தேதிகளில் விதர்பா ஆகிய பகுதிகளிலும் வெப்ப அலை அதிகரிக்கும்.

மேலும், 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பீகார், ஒடிசா மற்றும் கங்கை மேற்கு வங்காளம் மற்றும் மே 14 முதல் 16 வரை கடலோர ஆந்திரா & யானம் ஆகிய பகுதிகளிலும் வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும். மேலும், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, அடுத்த 2 நாட்களில் கொங்கனில் வெப்பம் மற்றும் அசௌகரியமான வானிலை மிக அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில்  மே 12 அன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திரிபுரா மற்றும் மிசோரம் பகுதிகளில் மே 13 ஆம் தேதி கனமழையுடன் பெய்யக்கூடும் . மே 14 ஆம் தேதி நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் தெற்கு அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

5 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

6 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

7 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

7 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

7 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

8 hours ago