சமீப காலமாக இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப்பை சில சமூக விரோதிகள் வேவு பார்ப்பதாக, உளவுத்துறை எச்சரித்து வந்தது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மேலும், சில உயர் அதிகாரிகளின் பேஸ்புக் கணக்கை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர் ஒருவரது வாட்ஸ்அப் நம்பர் ஆனது பாகிஸ்தானில் உள்ள ஒரு குரூப்பில் இவரது அனுமதி இல்லாமலே இணைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அந்த ராணுவ வீரர் அந்த குரூப்பை பற்றிய தகவலை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த குரூப்பில் இருந்து தன் நம்பரை வெளியேற்றினார். இதுகுறித்து மேலதிகாரியிடம் புகார் கூறியிருந்தார். இதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்க்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகத்தான் உயர் ராணுவ அதிகாரிகள் சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என ராணுவம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளதாம்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…