யாஸ் புயல் எதிரொலி: 6 விமானங்களை ரத்து செய்த மும்பை விமான நிலையம்...!

Echo of Yash storm: Mumbai airport cancels 6 flights

ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் அச்சம் காரணமாக,6 விமானங்களை ரத்து செய்வதாக மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் உருவான யாஸ் புயலானது இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கி 11.30 மணியளவில் வடக்கு ஒடிசாவின் பாலசூருக்கு அருகே கரையைக் கடந்தது.அவ்வாறு புயல் கரையைக் கடக்கும் போது 130-155 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன.மேலும்,இப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில்,ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் அச்சம் காரணமாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (சி.எஸ்.எம்.ஐ.ஏ), மும்பையிலிருந்து,புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவுக்கு இடையே பயணிக்கும் ஆறு விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.