தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை உயிரிழப்பு..!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பாய்குரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியளவில், பனார்ஹட்-நக்ராகடா வழித்தடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது. ரயிலின் வேகம் காரணமாக, தண்டவாளக் கற்கள் மீது இழுத்து செல்லப்பட்ட யானையானது, ரத்தம் சொட்ட சொட்ட மரங்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்தது.
அதனை கண்ட பொதுமக்கள் சிலர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைக்கு சிகிச்சை அளித்தனர் ஆனால், படுகாயமடைந்த அந்த யானை, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேலும் அந்த வழித்தடங்களில் நிறைய விபத்துக்கள் ஏற்படும் நிலையில் அங்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025