EngineersDay:"இன்ஜினியர்களின் முக்கிய பங்குக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது" – பிரதமர் மோடி..!

EngineersDay: "Words are not enough to thank engineers for their important role" - PM Modi

இன்ஜினியர்கள் தினமான இன்று இன்ஜினியர்கள்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொறியியலின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ரீ எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினமான செப்.15 ஆம் தேதி நாடு முழுவதும் இன்ஜினியர்கள்(பொறியியல்) தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி,இன்று ‘இன்ஜினியர்கள் தினம்’கொண்டாடப்படுகிறது.பலரும் இன்ஜினியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,இன்ஜினியர்கள்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“கடின உழைப்பாளிகளான இன்ஜினியர்கள் அனைவருக்கும் இன்ஜினியர்கள் தின வாழ்த்துக்கள். நமது உலகத்தை சிறப்பாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்குக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. குறிப்பிடத்தக்க ஸ்ரீ எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் மற்றும் அவரது சாதனைகளை நினைவு கூர்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

unknown node
EngineersDay:"இன்ஜினியர்களின் முக்கிய பங்குக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது" – பிரதமர் மோடி..!