அளவில் சிறியதாக இருந்தாலும் நம்மை பாதுகாப்பதில் முக்கிய பங்கு – பிரதமர் மோடி

அளவில் சிறியதாக இருந்தாலும் நம்மை பாதுகாப்பதில் முக்கிய, அத்தியாவசிய முன்னெச்சரிக்கை கவசமாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது.அந்த வீடியோவில் இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் கொரோனாவை எதிர்த்து முகமூடி அணிய வேண்டும் என்ற யோசனையை ஊக்குவிக்கும் விதமாக பதிவிடப்பட்டது.மேலும் முகமுடி அணிவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது .
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இன்றைக்கு இருக்கும் சவால்களில் முக்கியமானது முகக் கவசம் அணிவது.அளவில் சிறியதாக இருந்தாலும் நம்மை பாதுகாப்பதில் முக்கிய, அத்தியாவசிய முன்னெச்சரிக்கை கவசமாக உள்ளது.எனவே இதுகுறித்த விழிப்புணர்வை அனைவரிடத்திலும் நாம் ஏற்படுத்துவது அவசியம் என்று பதிவிட்டுள்ளார்.
Among the most important tasks today- be a part of #TeamMaskForce.
Small but essential precautions can keep us all safe.
Important to spread awareness about it… https://t.co/50vY3lF20J— Narendra Modi (@narendramodi) April 18, 2020