பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு- AICTE அறிவிப்பு..!

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் சேருவதற்கான கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) தெரிவித்துள்ளது.

நாட்டில் நீண்டகாலமாக வெளிவரும் நிலைமைகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக  மாணவர்கள் சேருவதற்காக அவகாசம் நவம்பர் 30, வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி டிசம்பர் 01-ம் தேதி   என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி, துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்று AICTE கூறியுள்ளது.

unknown node