குடும்ப நண்பர் பிளாக் மெயில்…! பெங்களூர் தம்பதியினர் தற்கொலை..!

Default Image

பெங்களூரு பாசவேஸ்வரநகரில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரு குடும்ப நண்பர் தங்களை பிளாக்மெயில் செய்ததாகக் கூறி தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.
மோகன், 65, மற்றும் அவரது மனைவி நிர்மலா 54  இவர்கள்தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக மஞ்சுநாதநகரில் வசித்து வந்தனர். மோகன் பி.இ.எம்.எல் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியராக இருந்து உள்ளார். ​​நிர்மலா ஒரு இல்லத்தரசி.
இவர்கள் இருவரும் தண்ணீரில் கலந்த டாய்லெட் கிளீனரை சாப்பிட்டு இறந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு மாடி வீட்டின் தரை தளத்தில் அவர்களது மகன் கிரண் அவரது  மனைவியுடன் வசித்து வருகிறார்.
காலையில் கிரண் கதவை தட்டும்போது அவர்களிடம் இருந்து  எந்த சத்தமும் வராததால் அவர் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து கதவை உடைத்து பார்த்தபோது தம்பதியினர் இருவரும் இறந்துகிடந்தது உள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார்  நிர்மலா தமிழில் எழுதிய ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர். அதில் ,மனோகர் என்ற குடும்ப நண்பர் தன்னுடன் உறவு வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அவர் எங்களை  பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார்.
மேலும் அவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தி உள்ளார் என எழுதி இருந்தது. தற்கொலை கடிதத்தின் அடிப்படையாக வைத்து  மனோகர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir