பாஜக அரசின் ஆணவத்தை விவசாயிகள் அழிப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மதுராவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்திலும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு தனது ஆணவத்தில் விவசாயிகளுக்கு பலன் அளிக்காத சில சட்டங்களை விதித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், பாஜக அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைத்து எரிவார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், அரசு மற்றும் பிரதமரின் கடமை விவசாயிகளின் குரலைக் கேட்பதும் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பது தான். ஆனால் விவசாயிகளுக்கு எதிரான இழிவான சொற்களை பயன்படுத்துவது பாவம். அரசாங்கத்தை அமைக்க கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க வேண்டிய கடமை இருக்கும்பொழுது, தலைவர் திமிர்த்தனமாக இருந்தால் அவருடைய கொள்கைகள் மக்களுக்கு நன்மை பயக்காது என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…