#BREAKING: புதுச்சேரியில் கருப்பு புஞ்சைக்கு முதல் உயிரிழப்பு..!

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நோய்க்கு தேவையான மருந்துகள் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளது.
இந்நிலையில், வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த எழிலரசி (62) என்பவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் அப்போது அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி எழிலரசி உயிரிழந்தார்.
இதனால், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் பெண்ணாக எழிலரசி உள்ளார். கருப்பு பூஞ்சை நோய் எதிர்கொள்வதற்கு புதுச்சேரி சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதற்கு தேவையான மருந்துகளும் தற்போது கையில் இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.