முதல் கூட்டம் நிறைவு..அடுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் சிம்லாவில்..! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..

அடுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, உட்பட 15-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 4 மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது, ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்து வருகின்றனர்.
அதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இன்றைய கூட்டம் நல்லதொரு கூட்டமாக அமைந்தது. கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். விரைவில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் சிம்லாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.