நெய்மரின் தந்தை கைது? விதிகளை மீறியதால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம்.!

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு விளையாடி வரும் கால்பந்து வீரர், நெய்மர் ஜூனியரின் தந்தை நெய்மர் டி சில்வா சாண்டோஸ், சுற்றுச்சூழல் விதி மீறல் குற்றத்திற்காக பிரேசில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் கடற்கரை நகரமான மங்கராதிபாவில் உள்ள தனது மகனின் குடியிருப்பு பகுதியில், சாண்டோஸ் ஒரு செயற்கை ஏரியைக் கட்டி, சுற்றுச்சூழல் விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த ஏரியை கட்டுவது காடுகளை அழித்தல், பாறை உடைத்தல், நீர் வழித்தடத்தை திசை திருப்புதல், ஆற்று நீரை அனுமதியின்றி உறிஞ்சுதல், செயற்கை ஏரிக்கு நீர் எடுப்பது போன்ற தடை செய்யப்பட்ட போன்ற சுற்றுச்சூழல் மீறல்களில் ஈடுபட்டதால் நெய்மர் டி சில்வா சாண்டோஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனார். இருப்பினும், அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெய்மர் 2016 ஆம் ஆண்டில் சொத்தை வாங்கினார். இது 10,000 சதுர மீட்டர் (2.5 ஏக்கர்) நிலத்தில் அமைந்துள்ளது மற்றும் ஹெலிபேட், ஸ்பா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025