பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் கைது.! மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை.!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் ஓம் பிரகாஷ் சோனி லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளர்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருவமான ஓம் பிரகாஷ் சோனி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016 மற்றும் 2022க்கு இடையிலான காலகட்டத்தில் துணை முதலமைச்சராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சோனி. இவர் அந்த சமயத்தில் இவரது குடும்ப வருமானமாக 4.5 கோடி ரூபாய் இருந்தது என்றும், ஆனால் அவர் செலவு செய்த செலவுத்தொகை மட்டும் 12.5 கோடியாக இருக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபி சோனி தனது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெயரில் சொத்துக்களை வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறையால் நேற்று சண்டிகரில் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து சோனி, அமிர்தரசுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.