இலங்கையில் கோர விபத்து.! ஆற்றில் மூழ்கிய பேருந்து.. 11 பேர் உயிரிழப்பு.!

இலங்கையில், ஆற்றில் மூழ்கிய பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Bus Accident in Srilanka

இலங்கையில், ஆற்றில் மூழ்கிய பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில், நேற்று (ஞாயிற்று கிழமை) 67 பயணிகளுடன் அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேருந்து ஒன்று, பொலன்னறுவை அருகே சென்று கொண்டு இருக்கையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்து கோர விபத்தில் சிக்கியது.

இந்த விபத்த்தை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்தும், பலர் ஆற்றில் குதித்தும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதுவரையில் 11 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புப்படையினர் உதவியுடன் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுளளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் பொலன்னறுவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.