இனிமேல் பசுவின் சிறுநீரால் தயாரிக்கப்பட்டுள்ள பினாயில் வைத்து மட்டுமே அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு 11 கோடி உணவு அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன்பின் நிதி நெருக்கடி காரணமாக இவை அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய பிரதேச மாநில அரசால் வெளியிடப்பட்ட புதிய உத்தரவில் மத்திய பிரதேச அரசு அலுவலகங்கள் இனி பசுவின் சிறுநீரால் செய்யப்பட்ட பினாயில் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில பொது நிர்வாகத் துறையின் மூலமும் இதேபோல வேதியியல் பினாயில்களுக்கு பதிலாக மாட்டின் சிறுநீரில் தயாரிக்கப்பட்ட பினாயிலுக்கு மாறவண்டும் என அறிவித்திருந்தது.
இந்த நடைமுறை மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நடைபெறக்கூடிய பசுக்கள் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை மூலமாக மாட்டு சிறுநீரில் பாட்டில் ஆலை அமைப்பது ஊக்குவிக்கப்படும் எனவும், மாட்டு மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைப்பது அதிகரிக்கப்படும் எனவும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…