இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பின் முழு விவரம்

Full details of corona exposure in the last 24 hours in India

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,005 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,04,10,577 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 3 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,04,10,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1005 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,99,459 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 61,588 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,94,88,918ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,23,257 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை33,57,16,019பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.