மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி அமைந்துள்ளது.
சிவசேனா கட்சிக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மும்பை பாந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரே” மாதோஸ்ரீ “இல்லத்தில் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் 1,000 உணவகங்கள் அமைக்கப்பட்டு அந்த உணவகத்தில் முழு சாப்பாடு பத்து ரூபாய்க்கு வழங்கப்படும். மேலும் வீடுகளுக்கான மின்சார கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும் எனவும் கூறினர்.
இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள விவசாயகள் கடன் இல்லாத விவசாயிகளாக மாற்றபடுவார்கள் எனவும் , மருத்துவ பரிசோதனைக்காக மாநிலம் முழுவதும் ஒரு ரூபாய் கிளினிக் தொடங்கப்பட்டு அவற்றில் 200 வகையான நோய்களுக்கான பரிசோதனை செய்யப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…