குட்நியூஸ்...தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா;கடந்த 24 மணி நேரத்தில் 12,514 பேருக்கு பாதிப்பு..!

Good news ... Daily corona continues to decline; 12,514 people affected in last 24 hours ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,514 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 251 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,85,814 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,514 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 300 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,42,85,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 251 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,58,437 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,718 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,68,560 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,58,817 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,06,31,24,205 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.