#Shocking:பணத்திற்காக பாட்டியைக் கொலை செய்த பேத்தி, வார்ஜேவில் பயங்கரம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் வார்ஜே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தன்  சொந்த பாட்டியின் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக பாட்டியைக் கொலை செய்த

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் வார்ஜே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தன்  சொந்த பாட்டியின் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக பாட்டியைக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேத்தி போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 36,000 ரூபாய் பணம் மற்றும் தனது பாட்டியின் தங்கச் சங்கிலி மற்றும் காதணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார். பேத்தியின் முதற்கட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில்,கவுரி ஒரு வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில் பகுதி நேரமாக பணிபுரிவதும், அவர் ஆன்லைன் கிரெடிட் தளங்களில் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு பணம் தேவைப்பட்டதால் தனது பாட்டியைக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன் பாட்டியைக் கொன்ற 24 வயது பேத்தியை  கொலைக்குற்றச்சாட்டின் பேரில் போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.