தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடையை பாதிக்காதவாறு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்.! மத்திய அமைச்சகம் உறுதி.!

நேற்று டெல்லியில் 51 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நிதித்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்து பேசிய நிர்மலா சீதாராமன், ஆன்லைன் சூதாட்டம், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுக்காட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஆன்லைன் விளையாட்டு நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் சூதாட்ட விடுதிகள் அதிகம் உள்ள கோவா, சிக்கிம் ஆகிய மாநிலங்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்தனர் என்று தெரிவித்தார்
இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிப்பானது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அமல்படுத்தப்பட்ட பின்னர் ஆறு மாதங்கள் பகுப்பாய்வு செய்து பின்னர் மீண்டும் ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை விதிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது இதனால் இந்த புதிய வரி விதிப்பானது ஆன்லைன் தடை செய்யப்பட்ட மாநிலங்களில் சட்டபூர்வமாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் இருந்தது. இதற்கு பதில் கூறிய நிர்மலா சீதாராமன் எந்த மாநிலங்களில் தடை இருக்கிறதோ அந்த மாநிலங்களில் தடை தொடரும் எனவும் அந்த மாநிலங்களில் இந்த வரி விதிப்பு இருக்காது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025