குஜராத் : 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ...!

Police say 730 crore worth of heroin has been seized in Gujarat.

குஜராத் மாநிலத்தில் 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி கே.கே.படேல் கூறுகையில், 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே போல நேற்று இரண்டு கிலோ எடையுள்ள ஹெராயின்  கைப்பற்றப்பட்டது. மேலும், அதை கடத்தி வந்த 4 பேரை கைது செய்துள்ளோம். இதுவரை மொத்தமாக 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.